IND vs NZ: நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை - காரணம் இதோ
டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்ததும் நவம்பர் 17ஆம் தேதிமுதல் உள்நாட்டில் இந்தியா, நியூசிலாந்து இடையில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 17ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறும். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதி கான்பூரிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பையிலும் துவங்கவுள்ளது.
இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் 14ஆவது சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் ஓய்வுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நடரஜான் தங்கராசுவுக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக ஐபிஎல் இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது கரோனா காரணமாக அவரால் அத்தொடரில் விளையாடமுடியவில்லை.
இருப்பினும் அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.
Also Read: T20 World Cup 2021
ஆனால், அவரால் பழையபடி சரியான பார்மில் பந்துவீச முடியவில்லை. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை வாரி வழங்கி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறி வருகிறார். இதன் காரணமாக அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.