பாண்டியா நீக்கப்பட்டது குறித்து விளக்கம் தந்த கங்குலி!

Updated: Wed, Dec 01 2021 16:36 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் உடற்தகுதி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் தேர்வுக்குழுவினர் தரப்பில் இதுபற்றி ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் பாண்டியா, டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், “பாண்டியா, நல்ல கிரிக்கெட் வீரர். காயம் காரணமாக நல்ல உடற்தகுதியில் இல்லை. அதனால் தான் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பாண்டியா இளம் வீரர். காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை