சிறந்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த பிரையன் லாரா; ஆனால் அது பும்ரா கிடையாது!

Updated: Wed, Jul 03 2024 15:18 IST
சிறந்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த பிரையன் லாரா; ஆனால் அது பும்ரா கிடையாது! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதுகுறித்து பேசிய பிரையன் லாரா, “இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆன்டர்சன் சமகால கிரிக்கெட்டில் விளையாடும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது புள்ளிவிவரங்கள் அற்புதமானவை மற்றும் அவர் இங்கிலாந்துக்காக நிறைய செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனதில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் அப்படி நினைத்தால், அது அப்படியே இருக்கட்டும்.

அவர் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் அவர் தனது கடைசி போட்டியில் விளையாடுவதன் காரணமாக அலட்சியமாக இருப்பார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் நான் என்ன சொல்வது? என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளச்ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்’ என தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், எஞ்சியிருக்கு போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இத்தொடர் முழுவது இங்கிலாந்து அணியுடன் பயணிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை