டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா விளையாட வேண்டும் - ஹர்ஷா போக்ளே!

Updated: Tue, Nov 23 2021 12:28 IST
Image Source: Google

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் வனிந்து ஹசரங்கா. இவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்டுகள், 29 ஒருநாள், 33 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் தொடரின் சூப்பர் 12 சுற்றில் 10 விக்கெட்டுகள் எடுத்து கவனம் பெற்றார். மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் எடுத்தார். 

இந்நிலையில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் எனப் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கருத்து தெரிவித்துள்ளார். காலேவில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டி குறித்து ஹர்ஷா போக்ளே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுரங்கா லக்மலை எண்ணிப் பார்க்கிறேன். திறமையான பந்துவீச்சாளர். ஆனால் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச அரிதாகவே வாய்ப்பு கிடைக்கிறது. சமீராவுடன் சேர்த்தால் இலங்கையிடம் நல்ல வேகப்பந்து வீச்சுக் கூட்டணி உள்ளது. 

Also Read: T20 World Cup 2021

அவர்களுக்கான ஆடுகளத்தை உருவாக்கலாம். அதேபோல வநிந்து ஹசரங்காவிடம் டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய அவருடைய கருத்தை அறிய விரும்புகிறேன். அவர் கட்டாயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை