எனக்கு கொடுக்க வேண்டிய விருதை தோனிக்கு கொடுத்து அநியாயம் செய்தனர் - சயீத் அஜ்மல்!  

Updated: Sun, Jul 02 2023 12:52 IST
Image Source: Google

கடந்த 2012/13-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு டி20 போட்டியையும், பாகிஸ்தான் அணி ஒரு டி20 போட்டியையும் வென்றதால் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை 175 ரன்கள் கட்டுப்படுத்தி ஒயிட் வாஷ் செய்வதற்கு ஆவலோடு காத்திருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாச வீழ்த்தி தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி ஆட்டநாயகன் விருதுகளையும் பெற்றார்.

இந்நிலையில், 2013இல்ல் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து நியாயமாக தோனிக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை எனக்கு கொடுத்திருக்க வேண்டும். அநியாயம் செய்து விட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “2013இல் நாங்கள் இந்தியாவிற்கு சென்றபோது மொத்த தொடரையும் கைப்பற்றி விடும் அளவிற்கு பலத்துடன் இருந்தோம். ஒருநாள் போட்டிகளில் நான் அதிக கவனம் செலுத்தினேன். அப்போது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று விட்டோம். மூன்றாவது போட்டியிலும் இந்திய அணியை 175 ரன்களில் ஆல் அவுட் செய்துவிட்டோம். அந்த இன்னிங்சில் நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.

கடைசியில் போட்டியை இழந்திருந்தாலும், தோனி பேட்டிங்கில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். அதோடு இரண்டு கேட்ச்களை தவறவிட்டிருந்தார். எப்படி அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்தார்கள்? ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. மேன் ஆப் தி மேட்ச் என்பது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும். எந்த வகையில் தோனிக்கு கொடுத்தது நியாயமா? அதை இன்றளவும் என்னால் மறக்க இயலாது.” என்று தெரிவித்துள்ளர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை