தனது அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஈயன் மோர்கன் கருத்து!

Updated: Fri, Jun 17 2022 16:39 IST
Image Source: Google

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கன் தன்னுடைய அடுத்தக்கட்ட கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இன்னும் நீண்ட நாள் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு நான் தயாராக வேண்டும். என்னுடைய பங்களிப்பு, உடற்தகுதி ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பேன். 

நான் கேப்டனான பிறகு மற்ற எல்லோரையும் எப்படி மதிப்பிடுகிறேனோ அப்படித்தான் என்னுடைய பங்களிப்பையும் மதிப்பிடுவேன். என்னால் உலகக் கோப்பை வெற்றிக்குப் பங்களிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதுதான் என்னை இயக்குகிறது. அணியின் நலன் தான் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::