தோனியின் இடத்தை பிடிக்க முயற்சி செய்வேன் - இஷான் கிஷன்!

Updated: Fri, Jan 27 2023 12:31 IST
Image Source: Google

கடந்த சில காலமாக இஷான் கிஷன் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்த பிறகு இஷான் கிஷன், டி20, ஒருநாள் என 6 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். அதில் இசான் கிஷன் அடித்த அதிகபட்ச ஸ்கோரே வெறும் 37 ரன்கள் தான். இப்படி இருக்க தோனியின் இடத்தை எப்படி அவரால் நிரப்ப முடியும்.

இலங்கைக்கு எதிரான டி20 யில் 37 ,2, 1 ரன்கள் என அடித்த இஷான் கிஷன் நியூசிலாந்துக்கு எதிரான விளையாடிய 3 ஒரு நாள் போட்டியில் 5,8, 17 ரன்களை தான் அடித்துள்ளார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இன்று தொடங்கும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கண்டிப்பாக இஷான் கிஷன் ரன் அடிக்க வேண்டும். இல்லையென்றால் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமக்கு வழங்கப்பட்ட தொடக்க இடம் பறிக்கப்பட்டதால் தான் ஒரு நாள் தொடரில் இசான் கிசன் சரியாக விளையாடவில்லை என்று கூறப்பட்டது. தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர் தொடக்க வீரராக தான் களமிறங்குகிறார். இதனால் இந்த தொடரில் அப்படி எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாது என்ற காரணத்தால் மீண்டும் பார்முக்கு திரும்ப இசான் கிஷன் தீவிர பயிற்சியில் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் தம் மீது எழுந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதத்தில் பிசிசிஐ வெளியிட்ட காணொளியில் இசான் கிஷன் பேசி இருக்கிறார். அதில், தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான் என்றும், அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்ததாகவும் இசான் கிஷன் கூறி உள்ளார்.அவர் எங்கிருந்து வந்தாரோ தானும் அதே இடத்தில்தான் வந்திருப்பதாக குறிப்பிட்ட இசான் கிசன்,தோனி விட்டு சென்ற இடத்தை நான் நிரப்ப முயற்சி செய்வேன் என்று கூறினார்.

தற்போது தாம் ஜார்கண்டில் விளையாட உள்ளதால், தன்னுடைய அணி வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்வேன் என்று இசான் கிஷன் கூறி இருக்கிறார்.ஏற்கனவே அணியில் வாய்ப்புக்காக பிரித்விஷா, ருத்துராஜ், சஞ்சு சாம்சன் போன்றோர் காத்திருக்கும் நிலையில், இஷான் தன்னுடைய திறமையை நிரூபிக்கவில்லை என்றால், இந்த தொடரே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை