ஐபிஎல் 2022: பினிஷிங்கில் தோனி ஒரு மாஸ்டர் - டுவைன் பிரிட்டோரியஸ்!

Updated: Fri, Apr 22 2022 20:39 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயூடு 40 ரன்கள் எடுத்து கொடுத்தாலும் மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவைஇ என்ற நிலை ஏற்பட்டது.

பும்ரா வீசிய போட்டியின் 19ஆவது ஓவரில் சென்னை அணி 11 ரன்கள் குவிக்க உதவியாக பிரிட்டோரியஸ், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த பிராவோ ஒரு ரன் ஓடியதன் மூலம், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. களத்தில் இருந்த தோனி 1 சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து மிரட்டியதன் மூலம் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தோனியை போன்று சென்னை அணியின் வெற்றிக்கு மற்றொரு காரணமான டூவைன் பிரிட்டோரியஸ், போட்டியை பினிசிங் செய்வதில் தோனி ஒரு மாஸ்டர் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டூவைன் பிரிட்டோரியஸ் பேசுகையில், “தோனி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுப்பதில் சிறந்த மாஸ்டர், இந்த போட்டியிலும் தோனி அதையே மிக சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். நான் சந்தித்த முதல் ஓவரிலேயே ஸ்கூப் ஷாட் அடிக்கவா என தோனியிடம் கேட்டேன், ஆனால் இப்பொழுது வேண்டாம், பொறுமையாக இரு என கூறிவிட்டார்.

அதன்பின் 19ஆவது ஓவரில் நான் மீண்டும் கேட்ட போது தோனி சம்மதித்தார், அது சரியாகவும் அமைந்துவிட்டது. எனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள முயற்சித்து வருகிறேன். அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை