ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்டது குறித்து பேசிய டூ பிளெசிஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 31ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக கேப்டன் டூ பிளெசிஸ் 64 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 96 ரன்களை சேர்த்தார். மைதானம் பெரியது என்பதால் பலமுறை 2 ரன்களை மட்டுமே எடுக்க முடியந்தது. கிளென் மேக்ஸ்வெல் 23 (11), ஷாபஸ் அகமது 26 (22) போன்றவர்களும் தனது பங்கிற்கு ரன்களை சேர்த்ததால், ஆர்சிபி அசி 20 ஓவர்களில் 181/6 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய லக்னோ அணியில் க்ருனால் பாண்டியா 42 (28), கே.எல்.ராகுல் 30 (24), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 24 (15 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், லக்னோ அணி 20 ஓவர்களில் 163/8 ரன்கள் மட்டும் சேர்த்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஜோஸ் ஹேசில்வுட் 4/25 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய டூ பிளெசிஸ் சதத்தை தவறவிட்டது குறித்துப் பேசினார். அதில், “டிஒய் பாட்டீல் மைதனாம் அளவில் மிகவும் பெரியது. இதனால்தான் அதிகமுறை இரண்டு ரன்கள் ஓடும் நிலை ஏற்பட்டது. சமடிக்க வாய்ப்பிருந்தும் அதனை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் தயாரித்து வைத்திருந்த ப்ளூ பிரிண்ட் படிதான் விளையாடினேன்.
அடிக்கடி பேட்டை வேகமாக சுழற்றியதால் நான் டையர்ட் ஆகிவிட்டேன். பிட்ச் பெரியது என்பதால், தொடர்ந்து இழுத்து அடிக்க முடியவில்லை. வேகமாக ஓடி ரன்களையும் சேர்க்க முடியவில்லை. இறுதியில் ஓங்கி அடிக்க முடியாததால்தான் ஆட்டமிழந்தேன். இருப்பினும், இனி வரும் போட்டிகளில் இந்த குறைகள் இல்லாமல் என்னால் விளையாட முடியும்” எனக் கூறினார்.