ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!

Updated: Tue, Jan 23 2024 16:07 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளைக் கொண்டு ஆண்டின் சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், 2023ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட உருவாக்கப்பட்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி 2023ஆம் ஆண்டு உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பாட் காம்மின்ஸ், ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த அணியில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னும், இலங்கை அணியின் திமுத் கருணரத்னே ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். 

இதில் குறிப்பிடத்தக்க விசயமாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும் இவர்களைத் தவிர வேறு எந்த இந்திய வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: உஸ்மான் கவாஜா(ஆஸ்திரேலியா), திமுத் கருணரத்னே(இலங்கை), கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), பாட் கம்மின்ஸ் (கேப்டன்/ஆஸ்திரேலியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை