SA vs IND: இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து 3-0 என தொடரை வென்றது தென் ஆப்பிரிக்க அணி.
இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கின.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றது.
இந்த போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கு வீரர்களின் ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படும். இந்திய அணி 2 ஓவர்கள் தாமதமாக வீசியதால் வீரர்களுக்கு அவர்களது ஊதியத்தில் 40 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குற்றச்சாட்டை இந்திய கேப்டன் கேஎல் ராகுல் ஒப்புக்கொண்டுள்ளதால் அவர் மேற்கொண்டு எந்த விசாரணைக்கும் வரதேவையில்லை என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.