ஐசிசி உலகக்கோப்பை அணியின் கேப்டனாக பாபர் ஆசாம்; இந்தியர்களுக்கு இடமில்லை!

Updated: Mon, Nov 15 2021 18:46 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 7ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் நடப்பு இலகக்கோப்பை தொடரின் கனவு அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த அணியில் ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. இந்த அணியில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூவரும், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளிலிருந்து தலா இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Also Read: T20 World Cup 2021

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 அணி

  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 48.16 சராசரியுடன் 289 ரன்கள்
  • ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 89.66 சராசரியுடன் 269 ரன்கள்
  • பாபர் அசாம் (கேப்டன், பாகிஸ்தான்) - 60.60 சராசரியுடன் 303 ரன்கள்
  • சரித் அசலங்கா (இலங்கை) - 46.20 சராசரியுடன் 231 ரன்கள்
  • ஐடன் மார்க்ரம் (தென்ஆப்பிரிக்கா) - 162 ரன்கள், சராசரி 54.00
  • மொயீன் அலி (இங்கிலாந்து) - 131.42 ஸ்ட்ரைக் ரேட், 92 ரன்கள், 7 விக்கெட்டுகள்
  • வனிந்து ஹசரங்க (இலங்கை) - 9.75 சராசரியுடன் 16 விக்கெட்டுகள்
  • ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா) - 12.07 சராசரியுடன் 13 விக்கெட்டுகள்
  • ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) - 15.90 சராசரியுடன் 11 விக்கெட்டுகள்
  • டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து) - 13.30 சராசரியுடன் 13 விக்கெட்
  • அன்ரிச் நோர்ட்ஜே (தென்ஆப்பிரிக்கா) - 11.55 சராசரியுடன் 9 விக்கெட்டுகள்
  • 12வது: ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 24.14 சராசரியுடன் ஏழு விக்கெட்டுகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை