ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Oct 30 2023 11:07 IST
Image Source: CricketNmore

ஐசிசி நடத்தும் 13ஆவது உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்தியா, அஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
  • நேரம் - மதியம் 2.30 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி அடுத்த இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இங்கிலாந்தை வென்று , 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. மாற்று வீரர் மேத்யூசின் வருகை அந்த அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கேப்டன் மென்டிஸ், சமரவிக்ரமா, நிசாங்கா ஆகியோர் பேட்டிங்கிலும், மதுஷன்கா, ரஜிதா, தீக்ஷனா உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் எதிரணியின் சுழல் தாக்குதலை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ஸ்கோர் வேகம் அமையும்.

மறுபக்கம் ஆஃப்கானிஸ்தானை பொறுத்தவரை இரு வெற்றிகளும் பெரிய அணிகளுக்கு எதிராக பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 283 ரன் இலக்கை ஆஃப்கானிஸ்தான் ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸ்த்ரான் இருவரும் தான் அந்த அணியின் பேட்டிங்கில் ஆணிவேராக உள்ளனர். இவர்கள் நிலைத்து நின்று ஆடிவிட்டால் அவர்களின் கைஓங்கி விடும். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர் சுழல் வித்தையை காட்டினால் இலங்கையையும் மிரட்டலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் அதிக ஸ்கோர் எடுக்கும் மைதானமாகவே உள்ளது. இங்கு எப்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.  வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முன்னோக்கி இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடந்த 8 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகளும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதால், இதுவரைடாஸ் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம், சேஸிங் செய்வது இந்த பிட்சில் ஈஸியாக இருக்கும். 

நேருக்கு நேர்: 

  • மொத்த போட்டிகள்: 11
  • ஆஃப்கானிஸ்தான்: 3
  • இலங்கை: 7
  • முடிவில்லை: 1

உத்தேச லெவன்

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹ்மது.

இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மகேஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் – குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரஹ்மானுல்லா குர்பாஸ் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள்- இப்ராஹிம் சத்ரன், பதும் நிஷங்க
  • ஆல்ரவுண்டர் - ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஓமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள்- ரஷித் கான், கசுன் ராஜித, நூர் அஹமத், தில்ஷான் மதுஷங்க

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை