ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கெனவே இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளதால் வெறும் சம்பிரதாய போட்டியாகவே இது நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs நெதர்லாந்து
- இடம் - மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
பிட்ச் ரிப்போர்ட்
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் அதிக ஸ்கோர் எடுக்கும் மைதானமாகவே உள்ளது. இங்கு எப்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முன்னோக்கி இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த மைதானத்தில் டாஸ் எந்த முக்கிய பங்கையும் வகிக்கவில்லை. எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம், சேஸிங் செய்வது இந்த பிட்சில் ஈஸியாக இருக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 06
- இங்கிலாந்து - 06
- நெதர்லாந்து - 00
உத்தேச லெவன்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், மார்க் வுட்.
நெதர்லாந்து: வெஸ்லி பரேசி, மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், சிப்ரண்ட் இங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரீலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்ஸ்மேன்கள் - சிப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஜோ ரூட், டேவிட் மலான் (கேப்டன்)
- ஆல்ரவுண்டர் - மொயின் அலி, லோகன் வாக் பீக், டேவிட் வில்லி, பெஸ் டி லீடே
- பந்துவீச்சாளர்கள்- ஆதில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் (துணை கேப்டன்), மார்க் வுட்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.