ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Oct 27 2023 23:07 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்தியா, அஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இத்தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுமே நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், வங்கதேசம் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: நெதர்லாந்து vs வங்கதேசம்
  • இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம்: பிற்பகல் 2.00 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மட்டுமே வெற்றியைப் பெற்று புள்ளிபட்டியளில் 8ஆவது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதிவாய்ப்பும் கேள்விகுறியாகியுள்ளதால் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றியையாவது பெறும் முனையில் அந்த அணி நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது. 

அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தஸித் ஹசன், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரும் பந்துவீச்சில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மத், ஷொரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

மறுபக்கம் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியோ புள்ளிப் பட்டியலில் கடைசியாக உள்ளது. அவர்களது நெட் ரன்ரேட் -1.902 ஆக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் இவர்கள் 309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதே. இவர்களை பொறுத்தவரை நாளைய போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே வெற்றியை இவர்களால் பெற முடியும்.

அந்த அணியின் பேட்டிங் வரிசையில் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு ஆகியோர் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபக்கம் பந்துவீச்சில் லோகன் வான் பீக், வேண்டர் மொர்வ், ஆர்யன் தத், பால் வான் மீகெரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுவருவது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பொறுத்த வரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று சவாலை சந்திக்க கூடும். அத்துடன் இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • வங்கதேசம் - 01
  • நெதர்லாந்து - 01

உத்தேச லெவன்

வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - லிட்டன் தாஸ்
  • பேட்ஸ்மேன்கள்- மஹ்முதுல்லா, நஸ்முல் ஹுசைன் சாண்டோ
  • ஆல்-ரவுண்டர்கள் - சிப்ரண்ட் இங்கல்பிரெக்ட், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), காலின் அக்கர்மேன், பாஸ் டி லீட் (துணை கேப்டன்), மெஹ்தி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள்- முஸ்தாஃபிசூர் ரஹ்மான், லோகன் வாக் பீக், ஷோரிஃபுல் இஸ்லாம்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை