ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Nov 08 2023 19:44 IST
Image Source: CricketNmore

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி - நியூசிலாந்து vs இலங்கை 
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூரு சின்னசாமி மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் ரன்களை குவிக்க ஏதுவாகவும், பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கு டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 101
  • நியூசிலாந்து - 51
  • இலங்கை - 41
  • முடிவில்லை - 08

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், இஷ் சோதி, டிம் சௌதீ, டிரென்ட் போல்ட்

இலங்கை : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, தில்ஷன் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: குசல் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன் (துணைக்கேப்டன்), டெவோன் கான்வே, சதீர சமரவிக்ரம, சரித அசலங்கா
  • ஆல்-ரவுண்டர்கள்: ரச்சின் ரவீந்திர (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், சமிகா கருணாரத்னே
  • பந்துவீச்சாளர்கள்: டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கைல் ஜேமிசன்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை