ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Oct 30 2023 22:22 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி நடத்தும் 13ஆவது உலக கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்தியா, அஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து 4 தோல்விகளை தழுவியுள்ளதால் நாளைய போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs பாகிஸ்தான்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலும், அதன்பின் விளையாடிய 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 

அதிலும் அந்த அணியின் பேட்டிங்கில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல் ஆகியோரைத் தவிர மற்ற பேட்டர்கள் அனைவரும் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, ஷதாப் கான், முகமது வாசீம் ஜூனியர் ஆகியோரும் சொபிக்க தவறியுள்ளது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணிக்கும் நடப்பு உலகக்கோப்பை தொடர் மிக மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. அந்த அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதோடு, மற்ற அனைத்து போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அணியின் நடத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹதி ஹசன் ஆகியோர் தொடர்ந்து சோபிக்காமல் இருந்தது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தைவரையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷொரிபுல் ஹசன் சிறப்பாக செயல்பட்டாலும் மற்ற பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.

பிட்ச் ரிப்போர்ட்

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பொறுத்த வரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று சவாலை சந்திக்க கூடும். அத்துடன் இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 38
  • பாகிஸ்தான் - 33
  • வங்கதேசம் - 05

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, சௌத் ஷகீல், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம், ஹரிஸ் ரவூஃப்.

வங்கதேசம்: தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், மெஹிதி ஹசன், தஸ்கின் அஹ்மது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள்- மஹ்முதுல்லா ரியாத், பாபர் ஆசம், அப்துல்லா ஷஃபிக்
  • ஆல்-ரவுண்டர் - ஷகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), இப்திகார் அகமது, மெஹிதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஜ்
  • பந்துவீச்சாளர்கள்- ஷஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஷோரிஃபுல் இஸ்லாம், ஹாரிஸ் ரவுஃப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை