ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Oct 16 2023 15:19 IST
Image Source: CricketNmore

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாள் நாளைய போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதிய போட்டிகள் - தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து
  • இடம் - ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம் 

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்துபடைத்துவருகிறது. அதிலும் குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரஸ்ஸி வேண்டர் டூசென், டெம்பா பவுமா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் அசத்தி வருகிறது.   

அதேசமயம் பந்துவீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென், கேசவ் மகாரா, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியை திணறடித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பேட்டிங், பௌலிங் என தென் ஆப்பிரிக்க அணி ஒட்டுமொத்தமாக வலிமையான அணியாக உள்ளதால் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக தங்களை நிரூபித்துள்ளது.

மறுப்பக்கம் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி தரும் அணியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இத்தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இருப்பினும் விளையாடிய இரண்டு போட்டிகளில் கடும் போட்டியைக் கொடுத்து.

அணியின் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, காலின் அக்கர்மேன் ஆகியோரும், பந்துவீச்சில் பாஸ் டி லீட், பால் வான் மீகெரன், வெஸ்லி பரேஸி, லோகன் வான் பீக், ஆர்யன் தத் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு சவலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.    

பிட்ச் ரிப்போர்ட் 

பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும் தரம்சாலா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் அதிக ஸ்கோரிங் போட்டிகளை இங்கே காணலாம். இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 07
  • தென் ஆப்பிரிக்கா - 06
  • நெதர்லாந்து - 00
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன் 

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), சிப்ரண்ட் இங்கல்பிரெக்ட், ரீலோஃப் வான்டெர் மெர்வ், ரியான் க்ளைன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென். 

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள்- டெம்பா பவுமா, ராஸ்ஸி வான்டெர் டுசென், விக்ரம்ஜீத் சிங்
  • ஆல்-ரவுண்டர்கள் - கொலின் அக்கர்மேன், ஐடன் மார்க்ரம், பெஸ் டி லீட் (துணை கேப்டன்), மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள்- பால் வான் மீகெரென், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை