ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Oct 06 2023 21:52 IST
Image Source: CricketNmore

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இலங்கை
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0800)

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணியில் எதிரணிகளை மிரட்டும் அளவுக்கு காகிஸோ ரபாடா, லுங்கி இங்கிடி, மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸி ஆகிய அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களால் வேகப்பந்து வீச்சு கூட்டணி வலுவாகவே இருக்கிறது. அதே போல தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகாராஜ் ஆகிய முதன்மை ஸ்பின்னர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு திறமையானவர்களாக கருதப்படுகின்றனர்.

அதே சமயம் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து பெரிய ரன்களை குவிப்பதில் தடுமாற கூடியவராக இருந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் பெரிய ஸ்கோரை குவித்து வருகிறார். மேலும் டி காம், ஐடன் மார்கம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் என அதிரடி பேட்டர்கள் அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறார்கள். இருப்பினும் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் இல்லாதது தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  

மறுபக்கம் உலகக்கோப்பை தொடரில் போட்டியின் போக்கையே மாற்றும் திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது இலங்கையின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மகேஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உலகக்கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மைதானங்களின் தன்மை இலங்கையை போன்று தான் இருக்கும் என்பது, அவர்களுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 

பேட்டிங்கில் குசால் பெரேரா, சரித் அசலங்க, பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோருடன் கேப்டன் தசுன் ஷனகாவும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இலங்கை அணி சவாலாளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா இல்லாதது இலங்கை அணிக்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானம் எப்படி 

வரலாற்றில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வந்த டெல்லி மைதானம் தற்போது பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் இந்தப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் வழக்கமாக புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். மேலும் இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சராசரி ஸ்கோர் 241 ஆகும். மேலும் பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் இங்கு முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 80
  • தென் ஆப்பிரிக்கா - 45
  • இலங்கை - 33
  • முடிவில்லை - 01
  • டை - 01

உத்தேச லெவன்

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்ல்ர், மார்கோ ஜான்சென், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, லுங்கி இங்கிடி.

இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதிர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தசுன் ஷனக(கே), துனித் வெல்லாலகே, தனஞ்சய் டி சில்வா, மதிஷா பதிரானா, மகேஷ் தீக்ஷனா, லஹிரு குமாரா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், குசல் மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள்- ரஸ்ஸி வான் டெர் டுசென், பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர் - தனஞ்சய் டி சில்வா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), துனித் வெல்லாலகே (துணை கேப்டன்), மார்கோ ஜான்சென்
  • பந்துவீச்சாளர்கள்- தப்ரைஸ் ஷம்சி, மகேஷ் தீக்ஷனா 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை