டி20 உலகக்கோப்பை: ஜன.21ல் முழு போட்டி அட்டவணையை வெளியிடும் ஐசிசி!

Updated: Fri, Jan 14 2022 22:17 IST
Image Source: Google

கடந்த் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 7 முறை டி20 உலக கோப்பை தொடர் நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய டி20 உலக கோப்பை தொடர் கரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்பட்டது.

இதில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றசத்தியது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு, பிரிஸ்பேன், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி, கீலாங் ஆகிய நகரங்களில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன. நவம்பர் 13ஆம் தேதி இறுதிப்போட்டி மெல்போர்னில் நடக்கிறது. நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே 2 அரையிறுதி போட்டிகள் சிட்னி மற்றும் அடிலெய்டில் நடக்கின்றன.

எந்தெந்த நாட்களில் எந்தெந்த போட்டிகள் எங்கு நடக்கின்றன என்ற முழு போட்டி அட்டவணை வரும் 21ஆம் தேதி வெளியிடப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. எனவே ரசிகர்கள், தாங்கள் எந்த போட்டிகளை பார்க்க விரும்புகின்றனரோ அந்த போட்டிகளுக்கான டிக்கெட்டை பெற முடியும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை