ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் தொடரை தொடங்கியது. இதில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி முதல் கோப்பையை வென்றது. இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். எனவே அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடிக்கத்தான் போராடும்.
அதன்படி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மேலும் இத்தொடரானது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் அமைந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 75 சதவிகித வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொர்ந்து 71.43 என்ற வெற்றி சதவிகிதத்துடன் தென் ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. மேலும் இப்பாட்டியலில் 58.33 வெற்றி சதவிகிதத்துடன் இந்திய அணி 3ஆம் இடத்தில் உள்ளது.
அதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 55.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் கடைசி 2 இடங்களில் உள்ளன.