ஐசிசி தரவரிசை: பாபர், அஃப்ரிடி முன்னேற்றம்!

Updated: Wed, Aug 25 2021 17:05 IST
Image Source: Google

பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன்செய்தது. 

இன்றுடன் இத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

இதன் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி 18ஆவது இடத்தில் இருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் பாபர் அசாம் எட்டாவது இடத்தில் இருந்து 7ஆவது இடத்திற்கும், ரிஷாப் பண்ட் ஏழாவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், டெஸ்ட்தொடர் முடிவில் தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிப் பறித்தார். இவர் முதல் டெஸ்டில் 10, இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட் என மொத்தம் 18 விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை