ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த நியூசிலாந்து!

Updated: Mon, Jun 14 2021 11:42 IST
Image Source: Google

ஒவ்வொரு டெஸ்ட் தொடர் முடிந்த பிறகும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணிகள், வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியா அணியை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றியை தொடர்ந்து 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா (121 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா (108) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

இதேபோல இங்கிலாந்து 4-வது இடத்தையும், பாகிஸ்தான், 5 வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 7வது இடத்தையும், இலங்கை  8-வது இடத்தையும், வங்கதேசம்  9வது இடத்தையும், ஜிம்பாப்வே 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் தற்போது டெஸ்ட் தொடர் வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை