அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த குரூப் பி பிரிவில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர்.

Advertisement

இதில் அதிகபட்சமாக ஹர்னூர் சிங் 88 ரன்னும், ரகுவன்ஷி 79 ரன்னும், ராஜ் பாவா 42 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜ்வர்தன் 17 பந்தில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில், அயர்லாந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்காட் மெக்பத் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது. இந்தியா சார்பில் சங்வான், அனீஷ்வர் கவுதம், கவுஷல் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News