இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது - மைக்கேல் வாகன் பாராட்டு!
19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது.
பொறுப்புடன் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் 110 ரன்னில் அவுட்டானார். இதை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து இந்திய அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் உயர்தரமாக இருக்கிறது. இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது. யாஷ் துல் இணையில்லாதவராக இருக்கிறார்” என பாராட்டியுள்ளார்.