ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஷிகர் தவான்!

Updated: Fri, Apr 14 2023 11:54 IST
'If a Team Plays 56 Dot Balls, You End up Losing the Game': Shikhar Dhawan! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு இந்த முறை கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கடந்த ஆட்டத்தைப் போலவே பிரப் சிம்ரன் ரன்கள் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

பஞ்சாப் அணியில் சிக்கந்தர் ராஸாவுக்கு பதில் இடம்பெற்ற மேத்யூ ஷார்ட் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் எடுத்தார். கடைசியாக வந்த ஷாருக்கான் 9 பந்துகளில் 21 ரன் எடுத்த காரணத்தால், 20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 153 ரன்கள் எடுக்க முடிந்தது. இல்லையென்றால் இந்த ரன்களே வந்திருக்காது.

அதே சமயத்தில் குறைந்த இலக்கை நிர்ணயித்திருந்தாலும் ஆட்டத்தை கடைசி பந்துக்கு முன் பந்து வரை கொண்டு சென்றார்கள் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள். வெற்றிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி பந்துக்கு முன் பந்தில் நான்கு ரன்கள் தேவையாக இருந்த நிலையில் திவாட்டியா பவுண்டரி அடிக்க குஜராத் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மொத்த அணியும் கைவிட்ட நிலையில் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் எடுத்த காரணத்தால் கவுரவமான ஒரு ஸ்கோரை எடுத்து, இரண்டாவது பாதி கௌரவமான தோல்வியைப் பெற்றது பஞ்சாப். இந்த ஆட்டத்திலும் அதே பேட்டிங் யூனிட்டின் பிரச்சனை தொடர்கிறது.

போட்டிக்குப் பிறகு இது குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் ” நாங்கள் ஸ்கோர் போர்டில் நல்ல ரன்களை போடவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் டாட் பந்துகளை பார்த்தீர்கள் என்றால் எங்கள் அணி 56 டாட் பந்துகளை விளையாடி இருக்கிறது. இதுவே தோல்வி அடைவதற்கு முக்கியமான காரணமாகும். 

நாங்கள் இந்த விஷயத்தில் கண்டிப்பாக வேலை செய்து ஆக வேண்டும். எங்களுடைய பேட்டிங் யூனிட் பௌலிங் யூனிட்டுக்கு கொஞ்சம் வசதி செய்து தர வேண்டும். லிவிங்ஸ்டன் நேற்று பயிற்சிக்கு வந்தார். ஆனால் அவருக்கு கொஞ்சம் தசைப் பிடிப்பு பிரச்சனை இருந்தது. இன்னும் மூன்று நான்கு நாட்களில் சரியாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை