இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் : மான்டி பனேசர் நம்பிக்கை!

Updated: Sun, May 23 2021 11:00 IST
If Wickets Turn, Spinners Will Help India Win Series 5-0: Monty Panesar (Image Source: Google)

இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள டெஸ்ட் தொடர்களில் இதுவரை பெரிதாக சாதித்ததில்லை. 2007ஆம் ஆண்டு  ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின்னர் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வெல்லவே இல்லை. கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றபோதும் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி.

அண்மையில் இந்தியாவில் வைத்து இங்கிலாந்தை 3-1 என டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இந்திய அணி, அதே தன்னம்பிக்கையுடன், கிட்டத்தட்ட அதே அணியுடன் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலும் வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் இந்த டெஸ்ட் தொடர் நடக்கும் காலக்கட்டம் கோடைகாலம் என்பதால், இங்கிலாந்து தட்பவெப்ப நிலை இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவும் என்றும், அதனால் இங்கிலாந்தை 5-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பனேசர்,“இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய அனுபவம் வாய்ந்த சீனியர் ஸ்பின்னர்களுடன், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் போன்ற தரமான ஸ்பின்னர்களும் உள்ளனர். அண்மையில் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அக்ஸர் படேல் அசத்தியிருந்தார். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள். எனவே இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு ஒத்துழைத்தால் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணி: விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ். கேஎல் ராகுல், சஹா.

கூடுதல் வீரர்கள்: அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா, கே.எஸ்.பரத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை