ஆடுகளங்களை விமர்சிக்கும் வீரர்கள் மீது சயீத் அஜ்மல் கடும் தாக்கு!

Updated: Sun, Mar 20 2022 22:18 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்  போட்டி ராவல்பிண்டியிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி கராச்சியிலும் நடந்தது.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளுமே டிராவில் தான் முடிந்தன. 2 போட்டிகளிலும் முடிவு கிடைக்கவில்லை. ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஆகிய 2 ஆடுகளங்களுமே பேட்டிங்கிற்குத்தான் சாதகமாக இருந்தன. பவுலர்களுக்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பு இல்லை. 

2 ஆடுகளங்களுமே படுமந்தமாக இருந்தன. ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ், ஸ்மித் ஆகியோர் ராவல்பிண்டி ஆடுகளத்தை விமர்சித்தனர். ராவல்பிண்டி ஆடுகளத்திற்கு போட்டி நடுவரே சராசரிக்கும் கீழான பிட்ச் என்று ரிப்போர்ட் செய்தார். வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கூட கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ஆடுகளங்களை விமர்சிக்கும் வீரர்களை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் மிகக்கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சயீத் அஜ்மல், “விக்கெட் எடுக்க பொறுமை மிக முக்கியம். தொடர்ச்சியாக 8-10 ஓவர்கள் வீசி பேட்ஸ்மேன்களுடன் மைண்ட் கேம் ஆடவேண்டும். அதன்பின்னர் தான் திட்டங்கள், வியூகங்களை செயல்படுத்த வேண்டும். ஃப்ளாட்டான பிட்ச் என்று விமர்சிக்கும் வீரர்கள் கிரிக்கெட்டே ஆடாதீர்கள். 

எப்படிப்பட்ட பிட்ச் என்று பார்த்துவிட்டுத்தான் பந்துவீசுவீர்கள் என்றால், அப்புறம் என்ன ஸ்பின்னர்? அனைத்துவிதமான கண்டிஷன்களிலும் சிறப்பாக பந்துவீச ஸ்பின்னர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை