ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!

Updated: Sat, Jan 20 2024 21:53 IST
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் ஐஎல் டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - வில் ஸ்மீத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஸ்மீத் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வசீம் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் முகமது வசீம் அரைசதம் கடந்தார். 

அதேசமயம் ஆண்ட்ரே ஃபிளட்செர் 20 ரன்களிலும், மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த முகமது வசீம் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 ரன்களுக்கும், அம்பத்தி ராயுடு ஒரு ரன்னுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டிம் டேவிட் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தாப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் சிக்கந்தர் ரஸா இணை 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை