இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Oct 23 2024 20:12 IST
Image Source: Google

IN-W vs WI-W 1st ODIDream11 Prediction ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 

இதையடுத்து நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய மகளிர் அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியின் காரணமாகவே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. அதேசமயம் டி20 உலகக்கோப்பை சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நியூசிலாந்து அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

IN-W vs NZ-W 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs  நியூசிலாந்து மகளிர்
  • இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
  • நேரம் - அக்.24 மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs NZ-W: Ground Pitch Report

இந்திய மகளிர் vs  நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 33 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறையும், சேஸிங் செய்த அணி 17 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 237 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 365 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IN-W vs NZ-W: Head-to-Head in ODIs

  • மோதிய போட்டிகள் - 54
  • இந்திய மகளிர் அணி - 20
  • நியூசிலாந்து மகளிர் அணி - 23
  • முடிவில்லை - 01

IN-W vs NZ-W: Live Streaming Details

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 19 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி நேரலையில் காணலாம்.

India Women vs New Zealand Women Probable Playing XI

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங்

நியூசிலாந்து மகளிர் அணி: சுசி பேட்ஸ், சோஃபி டிவைன் (கே), லாரன் டவுன், அமெலியா கெர், ஜார்ஜியா பிளிம்மர், புரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஈடன் கார்சன், லியா தஹுஹு, ஃபிரான் ஜோனாஸ்

IN-W vs NZ-W Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - யஷ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ் - சுஸி பேட்ஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - சோஃபி டிவைன் (துணைக்கேப்டன்), தீப்தி சர்மா, அமெலியா கெர், ஹர்மன்பிரீத் கவுர்
  • பந்துவீச்சாளர்கள் - ரேனுகா தாக்கூர் சிங், ஃபிரான் ஜோனொஸ், ஸ்ரெயங்கா பாட்டீல்

IN-W vs NZ-W 1st ODI Dream11 Prediction, Today Match IN-W vs NZ-W, IN-W vs NZ-W Dream11 Team, Fantasy Cricket Tips, IN-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the New Zealand Women tour of India 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை