இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்திருந்தது. 

Advertisement

அதன்பின் மூன்றாம் நாளின் இரண்டாவது செஷனை விளையாடி வந்த நியூசிலாந்து அணியில் டாம் லேதம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 95 ரன்கள் சேர்த்திருந்த லேதம், அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோலஸ், ரச்சின் ரவீந்திர ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்துள்ளது. 

நியூசிலாந்து அணி தரப்பில் டாம் பிளண்டல் 10 ரன்களுடனும், கைல் ஜேமிசன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News