IND vs NZ, 1st Test: இலக்கைத் துரத்த போராடும் நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களையும், நியூசிலாந்து அணி 296 ரன்களையும் எடுத்தது. பின் இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதனால் 284 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இதில் வில் யங் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - வில்லியம் சொமெர்வில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தது. இதன்மூலம் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களைச் சேர்த்தது.
இதில் டாம் லேதம் 35 ரன்களுடனும், வில்லியம் சொமெர்வில் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற 205 ரன்களும், இந்தியா வெற்றி பெற 9 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.