நியூசிலாந்து vs இந்தியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Nov 22 2022 09:24 IST
IND v NZ: India Will Look To White-Wash The Series Against New Zealand In The Final T20I (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மவுன்ட் மாங்கானுயிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான்.

முந்தைய ஆட்டத்தில் சூர்யகுமாரின் அதிரடியான சதமும் (111 ரன்), தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சும் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கின. நியூசிலாந்து பவுலர் டிம் சவுதி 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை. அதே உத்வேகத்துடன் களம் இறங்கும் இந்தியா இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் வாய்ப்பை பெற்ற இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த ஆட்டத்தில் 6 ரன்னில் வீழ்ந்தார். இன்றைய மோதலில் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு முன்கூட்டியே டாக்டரின் அனுமதியை பெற்று இருப்பதால் அதற்காக இந்த ஆட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

ஒரு நாள் தொடரின் போது அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வழிநடத்த இருக்கிறார். அணியில் மார்க் சாப்மேன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

மொத்தத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேப்பியர் பேட்டிங்குக்கு உகந்த மைதானம். இங்கு 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 241 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக உள்ளது. ஆனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கொஞ்சம் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச லெவன்

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ (கே), ஆடம் மில்னே, லோக்கி ஃபர்குசன்.

இந்தியா - இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை