IND vs NZ: பார்வையாளருக்கான நெறிமுறைகள் வெளியீடு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 17ஆம் தேதி ஜெய்பூரில் உள்ள எஸ்எம்எஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிக்கு பார்வையாளர்களை அனுமதிக்கவும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது.
மேலும் இப்போட்டிக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு எந்தவொரு கரோனா நெறிமுறைகளையும் விதிக்கப்படவில்லை என்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது. மொத்தம் 25ஆயிரம் பார்வையாளர்கள் வரை மைதானத்தில் அமர முடியும் நிலையில், கரோனா பாதுக்காப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகதது பெரும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து பார்வையாளர்கள் தாங்கள் முதல் கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதலோ அல்லது கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழையோ மைதான நுழைவில் கட்டினால் போதுமானது என ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது.
Also Read: T20 World Cup 2021
மேலும் பார்வையாளர்களின் சான்றிதழை மைதான நுழைவாயிலில் உள்ள காவல்துறையினர் சரிபார்பனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்திலும் பார்வையாளர்களுக்கான நெறிமுறைகள் இவ்வளவு எளிமையாக இருப்பது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றன.