SA vs IND, 3rd Test: பும்ரா அசத்தல்; முன்னிலை பெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா!

Updated: Wed, Jan 12 2022 16:21 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 79 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 206 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 

அதன்படி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் 8 ரன்களுடனும், மகாராஜ் 6 ரன்களுடனும் விளையாடினர். 

இதில் ஐடன் மார்க்ரம் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் பும்ர பந்துவீச்சில் க்ளீன் போல்டானர். அவரைத்தொடர்ந்து கேஷவ் மகாராஜ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதன்பின் களமிறங்கிய பீட்டர்சன் - வெண்டர் டுசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேற்கொண்டு விக்கெட் ஏதும் விளாமல் தடுத்தனர். 

இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது. 

இதில் பீட்டர்சன் 40 ரன்களுடனும், வெண்டர் டுசென் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை