IND vs SL, 1st Test (Day 3 Tea): இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!
மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 574/8 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது. ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி 175 ரன்களை விளாசினார்.
பின்னா், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 108/4 ரன்களை சோ்த்திருந்தது. இரண்டாம் நாள் முடிவில், இந்தியா 466 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இதையடுத்து, இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசியது. குறிப்பாக, பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பந்துவீச்சிலும் இலங்கையை திணறடித்தார். நிசாங்காவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியெறினர். 174 ரன்கள் எடுத்திருந்தபோது, இலங்கை ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா சார்பாக் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து 400 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள இந்தியா, முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்கள் எடுக்காத இலங்கையை பாலோ ஆன் செய்ய பணித்தது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. அந்த அணியின் லஹிரு திரிமானே, பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்தா ஏஞ்சலோ மேத்யூஸ் - தனஞ்செய டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் 30 ரன்களில் டி சில்வா ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.