இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Jan 16 2024 20:55 IST
Image Source: CricketNmore

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்திலும், தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) கைப்பற்றும் வேட்கையில்  இந்தியா அணி உள்ளது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
  •     இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  •     நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சின்னசாமி மைதானம் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள பிட்ச் ஃபிளாட்டாகவும் பவுண்டரிகளின் அளவு சிறியதாகவும் இருக்கும். எனவே அதை பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்கள் குவிக்கலாம். இதனால் பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். 

இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 141 ரன்களாகும். இங்கு வரலாற்றில் நடந்த 9 போட்டிகளில் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 5 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே இம்முறை பனியின் தாக்கமும் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றியை கொடுக்கலாம்.

நேரலை 

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும். மேலும் ஓடிடி தளமான ஜியோ சினிமாவிலும் இத்தொடரை நேரலையில் காணலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 07
  •     இந்தியா - 06
  •     ஆஃப்கானிஸ்தான் - 0
  •     முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான் (கே), அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சஞ்சு சாம்சன்
  •     பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்ராஹிம் ஸத்ரன், விராட் கோலி
  •     ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி, அக்சர் படேல், அஸ்ரதுல்லா ஒமர்சாய், ஷிவம் துபே
  •     பந்து வீச்சாளர்: அர்ஷ்தீப் சிங்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை