ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!

Updated: Sun, Nov 19 2023 15:42 IST
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி! (Image Source: Google)

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாடி வருகிறது. 

தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அபாரமாக விளையாடி வந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 புள்ளி 3ஆவது ஓவரில் எல்லாம் 50 ரன்கள் கடந்தது. இதில் விராட் கோலி இரண்டு ரன்கள் எடுத்த உடனே மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார். 

அதாவது உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், தற்போது விராட் கோலி முறியடித்திருக்கிறார். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 46 போட்டிகளில் விளையாடி 1743 முதல் அடித்து இருந்தார். தற்போது அதனை விராட் கோலி முறியடித்து 37 போட்டிகளில் எல்லாம் அந்த ரன்களைக் கடந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

தற்போது முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 45 போட்டிகளில் விளையாடி 2278 ரன்கள் அடித்திருக்கிறார்கள். உலகக் கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் ஆறு சதம் அடித்து உள்ள நிலையில் விராட் கோலி ஐந்து சதம் அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலி இன்றைய போட்டியில் சதம் அடித்து மீண்டும் சச்சினின் சாதனையை சமன் செய்வாரா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்திய அணி மிகப்பெரிய இலக்கை தொட வேண்டும் என்றால் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல்ஆகியோரின் பங்கு இன்றைய ஆட்டத்தில் மிகவும் முக்கியமாகும். இந்திய அணி தற்போது அதிரடியாக விளையாடி வருவதால், எட்டாவது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி சுழற் பந்துவீச்சை கொண்டு வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை