BAN vs IND, 1st ODI: ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சால் 186 ரன்களில் சுருண்டது இந்தியா!

Updated: Sun, Dec 04 2022 14:49 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்தில் விளையாடி விட்டு நாடு திரும்பிய இந்திய அணி, அடுத்ததாக அருகில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ககிறது. 

அதில் வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெறுகிறது. இதில் வலிமை வாய்ந்த இந்திய அணியை வங்கதேச அணி எப்படி சமாளிக்கப்போகிறது என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து இந்திய அணியை பெட்டிங் செய்ய அழைத்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் சென் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - ரோஹித் சர்மா இணை களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 7 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்களிலும் கிளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகில் ஹல் ஹசனிடம் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வாஷிங்டன் சுந்தருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்த வாஷிங்டன் சுந்தர், இப்போட்டியிலும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 ரன்களிலும், அடுத்து வந்த ஷபாஸ் அஹ்மத் ரன் ஏதுமின்றியும், ஷர்தூல் தாக்கூர் 2 ரன்களிலும், தீபக் சஹார் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் அதிரடியாக விளையாடிய தொடங்கிய கேல் ராகுல் 73 ரன்களோடு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த முகமது சிராஜ், குல்தீப் சென் ஆகியோரும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இதனால் 41.2 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது.

வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும், எபோடட் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை