IND vs NZ: இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்குகிறது - சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா- நியூசிலாந்து மோதிய முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி இந்தியா- நியூசிலாந்து இடையே ட்ரா-வில் நிறைவடைந்தது. இதனால் 2-வது போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிதான் டெஸ்ட் தொடரை வென்றதாக அறிவிக்கப்படுவர்.
2ஆவது மும்பை போட்டியில் கேப்டன் ஆக விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்து கொள்கிறார். இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்ததாக பல சர்வதேச முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் ஆன சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
சச்சின் தனது ட்வீட்டில், “டீம் இந்தியா மற்றும் டீம் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் ஆட்டத்தின் பல கட்டங்களிலும் பின் தங்கி நின்றன. ஆனாலும், இரண்டு அணிகளுமே கடுமையாகப் போராடி ஆட்டத்தை மீண்டும் கைப்பற்றின. டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் 52 பந்துகளுக்கு தாக்கு பிடித்தது எல்லாம் பாராட்டுக்கு உரியது. இந்த வகையான ஆட்டம் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது” என தெரிவித்துள்ளார்.
கான்பூர் டெஸ்ட் போட்டியில் சதம், அரைசதம் என அடித்து விளாசி உள்ளதால் 2ஆவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பது உறுதியாகி உள்ளது. பெரும்பாலும் ரஹானேவுக்குத் தான் 2ஆவது போட்டியில் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.