IND vs PAK, Asia Cup 2023: தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது இந்தியா - பாகிஸ்தான் போட்டி!

Updated: Sat, Sep 02 2023 22:14 IST
Image Source: Google

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 3ஆவது லீக் போட்டி பல்லகலேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சுப்மன் கில் 10 ரன்னில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இஷான் கிஷான் 82 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாஹீன் அஃப்ரிடி ஓவரில் ஹர்திக் பாண்டியா 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த பும்ரா 16 ரன்கள் எடுக்க இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி விளையாட இருந்தது. ஆனால், மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது 4.2 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு, போட்டியின் 11.2ஆவது ஓவரிலும் மழை குறுக்கீடு இருந்தது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்கேற்றது போல் சிறுதுநேரம் மழை நிற்க பாகிஸ்தான் அணிக்கு 36 ஓவர்களில் 226 ரன்கள் என்ற இலக்கௌ நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சிறிதுநேரத்திலேயே மழை மீண்டும் குறுக்கிட்டது. தெடர்ந்து மழை பெய்த காரணத்தினால் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறாமல் போட்டி முடிவுவடைந்ததாக அறிவிக்கப்பது. இதன்மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் நேபாள் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. மேலும் அப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை