IND vs SA, 1st T20I: இஷான், ஹர்திக், ஸ்ரேயாஸ் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் தொடங்கிய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் விளையாடிவருகின்றன.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிரங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் - ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய இஷான் கிஷான் அரைசதம் கடந்து அசத்தினார். அரைசதம் அடித்த கையோடு, கேஷவ் மகாராஜ் வீசிய 14 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.
ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தையும் சிக்சருக்கு முயற்சித்த அவர் டேவிட் மில்லரிடன் லாங் ஆன் திசையில் கேட்ச்கொடுத்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 36 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் - துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை பவுண்டரிகளை விளாசி அணியின் ரன் ரேட்டை தொடர்ந்து உயர்த்தியவாரே இருந்தனர். அதன்பின் ஆட்டத்தின் கடைவி ஓவரில் ரிஷப் பந்த் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் இறுதிவரை ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 211 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 35 ரன்களைச் சேர்த்தார்.