IND vs SA, 3rd T20I: மிரட்டிய ருதுராஜ், இஷான் கிஷான்; தென் ஆப்பிரிக்காவுக்கு 180 டார்கெட்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3ஆவது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷானும் இணைந்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் பின்னர் பவுண்டரி மழை பொழிந்தார். அதிலும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவின் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கெய்க்வாய் 35 பந்துகளில் 57 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷானும் 31 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னில் நடையைக் கட்டினார். அதிரடியில் இறங்கி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானும் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்தும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தா. இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஒரு சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
Also Read: Scorecard
இதன்மூலம் 20 ஓவர்கல் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டுவைன் ப்ரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.