SA vs IND: வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்!

Updated: Sat, Dec 25 2021 20:22 IST
Image Source: Google

இந்திய அணி இதுவரை ஏழு முறை தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இந்த ஏழு தொடரில் ஒரு முறை கூட நம்மால் அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. ஆறு முறை தென்ஆப்பிரிக்கா அணியும், ஒரு முறை தொடரானது சமநிலையிலும் முடிந்துள்ளது. 

இந்நிலையில் இம்முறை நடைபெறவுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி முதல்முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், தன்னுடைய பிளேயிங் லெவனையும் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி நிச்சயம் ஏழு பேட்ஸ்மேன்கள் மற்றும் நான்கு பவுலர்களுடன் களம் இறங்க வேண்டும். அப்படி களமிறங்கும் பட்சத்தில் தான் இந்திய அணியால் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த முடியும்.

பந்துவீச்சை பொருத்தவரை பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் அஷ்வின் ஆகியோர் போதுமானவர்கள் தான். ஆனால் பேட்டிங்கில் 7 பேரை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 6 இன்னிங்ஸ்களில் ஒரு முறை மட்டுமே இந்திய அணி 250 ரன்களை கடந்தது .தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணிக்கு பேட்டிங் வீக்னஸ் இருக்கிறது.

எனவே நிச்சயம் 7 பேட்ஸ்மேன்கள் உடன் தான் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார். கடந்த முறை 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் கொண்ட விகிதத்தில் களமிறங்கியே இந்திய அணி தோல்வியை சந்தித்தது” என தெரிவித்துள்ளார். 

வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்: மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை