இந்தியா vs இலங்கை, முதல் டி20 : போட்டி முன்னோட்டம்!

Updated: Wed, Feb 23 2022 12:31 IST
Image Source: Google

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்காக இரு அணிகளும் லக்னோவில் முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை முழுமையாக வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியகுமார் யாதவ், தீபக் சஹார் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.

எனினும் ஜடேஜா, பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது சாதகமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்கலாம்.

இலங்கை அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் 4 -1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்துள்ளது. எனினும் இந்திய சூழலில் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது அசலங்கா, ஹசரங்கா, சந்திமால், சானுக்கா,குசல் மெண்டீஸ் போன்ற திறமையான பேட்ஸ்மேன்களும், தீக்சனா, கருணரத்னே போன்ற அசத்தலான பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

அதேசமயம் போட்டி நடைபெறும் லக்னோ ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்/இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்/அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

இலங்கை - கமில் மிஷார, பதும் நிஷங்கா, சரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷனக (கே), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார

ஃபெண்டஸி லெவன் டிப்ஸ்: 

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷான், குசல் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, பதும் நிஷங்க
  • ஆல்-ரவுண்டர்கள் - வெங்கடேஷ் ஐயர், சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, துஷ்மந்த சமீரா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை