இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2ஆவது 20 ஓவர் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கி‌ஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். போட்டியின்போது 4-வது ஓவரில் அவரது தலையில் பந்து தாக்கியது.

Advertisement

லகீரு குமாரா வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக அவர் ஹெல்மட்டை கழற்றினார். இந்திய மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்தது.

Advertisement

இந்த நிலையில் தலையில் பட்ட காயத்துக்காக இஷான் கி‌ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஷான் கி‌ஷன் நேற்று இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறோம்‘ என்றார்.

இந்த காயம் காரணமாக இன்று நடைபெறும் கடைசி 20 ஓவர் போட்டியில் இஷான் கி‌ஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் ரோஹித் சர்மாவுடன் வெங்கடேஷ் ஐயர் அல்லது மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கலாம். ஏற்கனவே காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகி இருந்தனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News