IND vs SL : இலங்கை பந்துவீச்சில் சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து.
முன்னதாக இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிகர் தவான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அதன்பின் தேவ்தத் படிக்கல் (9), சஞ்சு சாம்சன் (0), ருதுராஜ் கெய்க்வாட் (14) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் வாணிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.