INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!

Updated: Mon, Jan 01 2024 12:40 IST
INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்! (Image Source: Google)

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெற உள்ளது. நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும் போராடும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  •     இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  •     நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வான்கடே கிரிக்கெட் மைதான பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடக்க ஓவர்களில் பந்துவீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

நேரலை

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இந்தப் போட்டியை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 52 
  •     இந்திய மகளிர் அணி - 10
  •     ஆஸ்திரேலிய மகளிர் அணி - 42

உத்தேச லெவன்

இந்திய மகளிர் அணி - ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஜமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்நே ராணா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா சிங் தாக்கூர், டைடாஸ் சாது

ஆஸ்திரேலிய மகளிர் அணி- அலிசா ஹீலி (கே), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், மேகன் ஷாட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், அலனா கிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: பெத் மூனி, ரிச்சா கோஷ்
  •     பேட்ஸ்மேன்கள்: எலிஸ் பெர்ரி (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  •     ஆல்ரவுண்டர்: தீப்தி சர்மா (துணை கேப்டன்), தஹிலா மெக்ராத், பூஜா வஸ்த்ரகர்
  •     பந்துவீச்சாளர்கள்: அலனா கிங், ரேணுகா சிங், மேகன் ஷாட்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை