INDA vs NZA: படித்தார், கெய்க்வாட் அசத்தல்; தொடரை வென்றது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் டிரா ஆனது. 3ஆவது ஆட்டம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் சௌரப் குமார் முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2ஆம் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி, அசத்தினார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் ஏமாற்றமளித்தார். இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து முடிந்துள்ளது
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.இருப்பினும் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 127 பந்துகளில் 108 ரன்கள் அடித்துள்ள அவர் 12 பவுண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார். ரஜட் பட்டிதார் 30 ரன்களும், உபேந்திரா யாதவ் 76 ரன்களும் எடுக்க இந்திய ஏ அணி 293 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.இதில் மார்க் சாப்மன் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுக்க சீன் சோலியா அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காததால் நியூசிலாந்து ஏணி 237 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் 4 ரன்களில் வெளியேறினார்.
கேப்டன் பிரியாங் பஞ்சால் 17 ரன்களுடனும் ருத்துராஜ் கெய்க்வாட் 18 ரன்கள் உடனும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் பிரியாங் பஞ்சால் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட், 2வது இன்னிங்சிலும் சதம் அடிக்கும் வாய்ப்பை 6 ரன்களில் தவறவிட்டு 94 ரன்களில் ஆட்டமிழந்ததார். இதில் பட்டிதார் சதம் விளாச, சர்ஃபிராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் இந்திய ஏ அணி 2வது இன்னிங்சில் 359 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் தொடக்க வீரர் ஜோ கார்டர் சதம விளாச, கிலிவர் மற்றும் சாப்மான் முறையே 44 ரன்கள் மற்றும் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 302 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் இந்திய ஏ அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.