தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

அதேசமயம் இந்திய ஏ ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ஆயுஷ் பதோனி, விப்ராஜ் நிகாம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷானும், பிரப்ஷிம்ரன் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங்

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க ஏ அணி: மார்கஸ் அக்கர்மேன் (கேப்டன்), ஜோர்டன் ஹர்மான், ஜேசன் ஸ்மித், சினெதெம்பா கெஷில், டெலானோ போட்ஜீட்டர், கோடி யூசுஃப், ருபின் ஹர்மான், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், ரிவால்டோ மூன்சாமி, ஓட்னியல் பார்ட்மேன், குவேனா மபாகா, பிஜோர்ன் ஃபோர்டுயின், ட்ஷெபோ மோரேகி, மிஹ்லாலி ம்போங்வானா, ந்காபயோம்ஸி பீட்டர்

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News